தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாய்னா

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள நிலையில், ரசிகர் ஒருவர் தோல்வியடைந்த நட்சத்திர வீராங்கனை சாய்னாவை கேலி செய்ததற்கு, சாய்னா கூலாக பதிலடி கொடுத்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்துவை பாராட்டி அவரின் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.saina

அதேசமயம் ரசிகர் ஒருவர், தோல்வியடைந்த நட்சத்திர வீராங்கனை சாய்னாவை கேலி செய்தும் டுவிட் செய்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “டியர் சாய்னா உங்களுடைய பேக்கை மூட்டை கட்டிக் கொள்ளுங்கள். சிறப்பான ஒருவரை எப்படி வீழ்த்துவது என்பது தெரிந்த ஒருவரை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம் என்று தனது டுவிட்டில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் தெரிவித்த சாய்னா, கண்டிப்பாக, பிவி சிந்து உண்மையாகவே சிறப்பாக விளையாடினார். இந்தியா சிறப்பாக செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தனது தவறை உணர்ந்த அந்த ரசிகர், உங்களை காயப்படுத்தியதற்கு மன்னித்து விடுங்கள் என்றும், சரியாக விளையாடவில்லை என்ற அர்த்தத்தில் நான் குறிப்பிடவில்லை. நான் இப்போதும் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஒரு பிரச்னையும் இல்லை நண்பா, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று சாய்னா பதில் தெரிவித்தார். இதனையடுத்து அந்த ரசிகருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது, ஆனால், அவரோ, தன்னுடைய மன்னிப்பை சாய்னா ஏற்றுக் கொண்டதால், யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று டுவிட்டரில் தெரிவித்துவிட்டார்.

Comments
Loading...