தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரசிகர்களை ஏமாற்றிய கெயில்

முதலில் பேட்டிங் செய்த இலங்கை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 123 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கெயில் அதிரடியை காண்பதற்காக ஆயிரக்கணாக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு இருந்தனர்.geil

ஆனால் தொடக்க ஆட்டகாரராக கெயில் களமிறங்கவில்லை. இது ரசிகர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு விக்கெட் விழும்போதும் வீ வாண்ட் கெயில் என்று சத்தம் போட்டார்கள். முன்னதாக இலங்கை பேட்டிங் செய்துக்கொண்டிருக்கும் போது கடைசி நேரத்தில் கெயில் பீல்டிங் செய்யாமல் வெறியேறிவிட்டார். ஐ.சி.சி. விதிப்படி குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஒரு வீரர் பீல்டிங் செய்யாவிட்டால் அவர் களமிறங்குவதில் தாமதம் செய்யப்படும்.

இந்த விதிப்படி 4 விக்கெட்களை இழந்த பிறகுதான் கெயில் களமிறங்க முடியும் என்று நடுவர்கள் தெரிவித்து விட்டார்கள். சின்னசாமி மைதானம் நிரம்பி வழிந்ததற்கு முக்கிய காரணமே கெயில் தான். ஆனால் தங்கள் ஹிரோ பேட் செய்வதை பார்க்க முடியாததால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை புரிந்துக்கொண்டு கெயில் களமிறங்க முயன்ற போது நடுவர்கள் அவரை தடுத்து விட்டனர்.

Comments
Loading...