Designed by Iniyas LTD
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வலியுறுத்தி 113 பேர் கையெழுத்து..
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வலியுறுத்தி 113 பேர் கையெழுத்திட்ட சத்தியக்கடிதம் நாளையதினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு
அதோடு இந்த கடிதத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளைக் காலை 10மணிக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு செல்வார்கள் எனவும் ஐ. தே. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை தற்போது நாட்டில் பிரதமரோ, அமைச்சரவையோ இல்லை என்பதை தாங்கள் ஜனாதிபதியிடம் உறுதியாக தெரிவித்திருப்பதாக ஐ. தே. கட்சியின் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.