தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரன் குவிப்பில் மிரட்டின இந்தியா, நியூசிலாந்து அணிகள்

பயிற்சி கிரிக்கெட்டில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் ரன் குவிப்பில் மிரட்டின.  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் பிரதான அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடங்கியுள்ளன.India-vs-New-Zealand-

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நிலைத்து நின்று அசத்தினார். அவரது அதிரடியான பேட்டிங்கின் உதவியுடன் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேகரித்தது.

ரோகித் சர்மா 98 ரன்களுடன் (57 பந்து, 9 பவுண்டரி, 7 சிக்சர்) கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஷிகர் தவான் 21 ரன்களிலும், ரஹானே 7 ரன்னிலும், யுவராஜ்சிங் 31 ரன்னிலும் (20 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரவீந்திர ஜடேஜா 10 ரன்னிலும், பவான் நெகி 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் விராட் கோலி, கேப்டன் டோனி களம் இறங்கவில்லை. பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடியது.

நியூசிலாந்து 226

ரன்கள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை–நியூசிலாந்து அணிகள் சந்தித்தன. இதில் இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்து சிக்சர் மழை பொழிந்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. காலின் முன்ரோ 67 ரன்களும் (34 பந்து, 7 சிக்சர்), கோரி ஆண்டர்சன் 60 ரன்களும் (29 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), மார்ட்டின் கப்தில் 41 ரன்களும் (25 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர். அடுத்து 227 ரன்கள் இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது.

Comments
Loading...