Designed by Iniyas LTD
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் – வாசன்
2016-17 ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றும் அம்சங்கள் இடம்பெறவேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள திண்டிவனம் – திருவண்ணாமலை ரயில் பாதை, 8 ஆண்டுகளக கிடப்பில் உள்ள சென்னை – திண்டிவனம் இரட்டை ரயில் பாதை திட்டங்களைச் சுட்டிக்காட்டி உள்ளார். அதேபோல நீண்ட நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே உள்ள மதுரை – கன்னியாகுமரி இரட்டை வழித்திட்டம் மேலும் நிதி ஒதுக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் மதுரை – போடி அகல ரயில் பாதை திட்டம் ஆகிய திட்டங்களை நிறைவேற்ற இந்த ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட வேண்டும் என வாசன் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்தாமலும் அதேநேரத்தில் விளம்பரம் போன்ற உத்திகளை கையாண்டு ரயில்வேயில் வருமானத்தை பெருக்கவும் வழிவகை செய்யவேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.