தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர்களை தாக்கிய சிங்கள வன்முறைக் கும்பல்

தமிழ் இளைஞர்களை தாக்கிய சிங்கள கும்பலால் குருநாகல் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவு பதற்றம் நிலவியுள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டு காரணமாக நேற்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட தொடருந்தில் இடநெருக்கடி காணப்பட்டது.

ஆசனங்களை பிடிப்பதற்காக மக்கள் முண்டியடித்த நிலையில் ஆசனமொன்றை பிடிப்பது தொடர்பில் தமிழ், சிங்கள இளைஞர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இதன் காரணமாக இரு பகுதியினரும் பொல்ககவெல பகுதியில் மோதலில் ஈடுபட்டனர். மோதலில் ஈடுபட்ட சிங்கள தரப்பு குருநாகல் ரயில் நிலையத்தில் இறங்குவதற்கு ஆயத்தமானபோது அவர்களுக்கு ஆதரவாக பொல்லுகளுடன் வந்த சுமார் பத்து பேர் அடங்கிய கும்பல் தமிழ் இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளது.

இதனை தடுக்க முற்பட்ட ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தாக்குதலுக்கு உள்ள்ளாகியுள்ளனர்.

இச் சம்பவத்தில் யாழ் மானிப்பாயை சேர்ந்த வீரசிங்கம் திவ்விய பிரகாஷ் என்ற இளைஞரும் வேறு இரண்டு இளைஞர்களும் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...