தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரயில் மறியல் போராட்டம்: சென்னையில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் கைது

stalinகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாய சங்கங்கள் கூட்டியக்கத்தின் சார்பில் 2 நாட்கள் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தமாகா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

தி.மு.கவினர் மு.கஸ்டாலின் தலைமியில் பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே நியூ ஹால் பகுதியில் இருந்து ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்ற ரெயில் நிலையத்தை அடைந்தனர். அங்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக  முழக்கங்களை முன்வைத்து  கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தடையை மீறி பெரம்பூர் ரெயில் நிலையத்திற்குள நுழைந்த மு.க. ஸ்டாலின் செண்டரலில் இருந்து ஆவடி சென்ற  ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த அரை மணி நேரம் தாமதமாக புறபட்டு சென்றது. ரெயில் மறியலை தொடர்ந்து மு.கஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் கைது செய்யபட்டனர்.thiruma

இதுபோல் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசின் பிரிட்ஜ் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, திருமாவளவன் மற்றும் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

Comments
Loading...