தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரயில் மோதி தாயும் மகளும் பரிதாபமாக பலி!

30col0px-m2loco180946855_3899968_03012016_sss_cmyகண்டி நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் தாயும் மகளும் தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். இப்பரிதாபச் சம்பவம் நேற்று (11) கண்டி பொலிஸ் நிலையத்திற்கும் மத்திய சந்தைக்கும் அருகாமையில் அமைந்துள்ள ரயில் கடவையில் நிகழ்ந்துள்ளது.

ரயில் கடவையை கடக்க முற்பட்ட சுமார் 35 வயது மதிக்கத்தக்க தாய், 15 வயது மகள் ஆகியோர் மீது ரயில் மோதியதில் தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருவரும் ஸ்தலத்தில் உயிரிழந்தனர்.

கண்டியிலிருந்து நேற்று மாலை (11) மாத்தளைக்குச் சென்ற ரயில் இவ்விருவரையும் மோதியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ற விபரங்கள் இதுவரை தெரியவில்லை. இவ்விபத்துச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...