Designed by Iniyas LTD
ரஷ்யாவில் பல பாகங்களில் பாரிய இராணுவ பயிற்சி
ரஷ்யாவில் பல பாகங்களில் பாரிய இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்கு நாடுகளுடனான பனிப்போருக்குப் பின்னர் இந்த அளவிலான இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இராணுவ பயிற்சி நடவடிக்கைகளில் 41 யுத்த விமானங்கள் மற்றும் 15 நீர் மூழ்கி கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய கடற்படையினரை, முழு அளவிலான தயார் நிலையில் இருக்கும்படி ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.