தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரஷ்யாவில் போர் விமானம் விபத்து – மூவர் பலி…

ரஷ்யாவில் போர் விமானம் ஒன்று  தரையிறங்கும் போது  ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்ததுள்ளனர்.

வடக்கு ஆர்டிக் பகுதியில் உள்ள மர்மன்ஸ்க் ((MurmansK)) என்ற இடத்தில் விமானப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது.

அங்கு டபோலவ் டியு 22M3 ((Tupolev Tu22M3)) என்ற குண்டு வீசும் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

குறித்த பகுதியில் வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு இருந்ததால் பயிற்சியை பாதியில் முடித்துக் கொண்ட விமானப்படை வீரர்கள் முகாமுக்குத் திரும்பியுள்ளனர்.

விமானம் தரையிறங்கும் போது, பனியில் வழுக்கி விமானம் இருதுண்டுகளாக உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...