Designed by Iniyas LTD
ரஷ்ய விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் : ஐஎஸ் தீவிரவாத அமைப்பு
ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. முன்னதாக விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகிருந்தது.
217 பயணிகள், 7 விமானிகள் உள்பட 224 பேருடன் எகிப்தின் ஷாம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பெர்க்கிற்கு புறப்பட்ட ரஷ்ய விமானம் சினாய் தீபகற்பத்தில் பறந்த போது விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருநத அனைவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் ரஷ்ய விமானத்தை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம் என்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.