தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராசிபலன்

மேஷம்: 

இன்று மனகுழப்பம் ஏற்படும். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும்.

ரிஷபம்: 

இன்று பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தரும். 

மிதுனம்: 

இன்று ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனக்கவலை ஏற்படும்.

கடகம்: 

இன்று சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும்.

சிம்மம்:

 இன்று குடும்ப ஒற்றுமை உண்டாகும். நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாக செய்து  முடிப்பீர்கள். எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். 

கன்னி: 

இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும்.   

தொடர்புடைய பதிவு

துலாம்:

 இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த  கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம்  அதிகரிக்கும்.

விருச்சிகம்:

 இன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.

தனுசு: 

இன்று அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப்  பெறுவீர்கள்.

மகரம்:

 இன்று மற்றவர்கள் மீது பரிவுகாட்டும் குணம் மேலோங்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம்  வருவது அதிகரிக்கும். 

கும்பம்:

 இன்று மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும்.

மீனம்: 

இன்று குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக  இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே  அன்பான  நிலை காணப்படும்.

Comments
Loading...