தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராஜபக்சவின் அரசியல் சூழ்ச்சி தமிழக மீனவர்களின் தூக்கு ரத்து – வைகோ

இலங்கையில் தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கி ரத்து செய்வார் என்று கூறியிருப்பது ராஜபக்சவின் அரசியல் சூழ்ச்சியே என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மலேசியாவில் நடைபெற்ற பினாங்கு உலகத் தமிழ் மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து விட்டு இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இலங்கை தமிழர்களுக்காக நான் பல்வேறு நாடுகளில் நடந்த மாநாடுகளில் பேசி இருக்கிறேன். மலேசியா மாநாடுதான் எனது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

ஏனெனில் இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் தமிழ் மொழியை பற்றி மிகவும் சிறப்பாக பேசினார்கள். மேலும் ஈழத் தமிழர்களுக்கும் பலத்த ஆதரவு தெரிவித்தனர்.vaiko

அப்போது, இலங்கையில் தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை ராஜபக்ச ரத்து செய்வார் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளாரே என்று நிருபர்கள் வைகோவிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு வைகோ பதிலளிக்கையில்,

இது ராஜபக்சவின் அரசியல் சூழ்ச்சி. இதற்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து போதை பொருள் கடத்தி வந்தவர்களுக்கு கூட தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை.

அப்பாவியான 5 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசை ராஜபக்ச தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சி செய்கிறார்.

இது தமிழர்களிடையே தன்னை நல்லவராக காட்டிக் கொள்ளும் நாடகம் ஆகும் என்றார்.

Comments
Loading...