தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராமேஸ்வரம் மன்னாருக்கு இடையிலான பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்திற்கு ஸ்ரீலங்கா அரசு எதிர்ப்பு !

laksman kiriyalla_ராமேஸ்வரம் மன்னாருக்கு  இடையில் பாலம் அமைக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படும் என அந்நாட்டு நாடாளுமன்றில் அறிவித்திருந்தார். எனினும், இந்த உத்தேச திட்டத்திற்கு இலங்கை இணங்காது என அமைச்சர் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா  மக்கள் இந்த திட்டத்தை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Comments
Loading...