Ramkumar-3சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரே குற்றவாளி என்கிற வகையில் பொலிஸார் மற்றுமொரு தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த மாதம் 24ம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இக்கொலை தொடர்பில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள முன்வைக்கப்படுகின்றன.

அந்த வகையில் ராம்குமார் அணிந்திருந்த சட்டையில் படிந்திருந்த இரத்த மாதிரி சுவாதியின் இரத்த மாதிரியுடன் ஒத்து போவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கொலை தொடர்பில் தேவையான ஆதாரங்கள், சாட்சியங்களை பொலிஸார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இரத்த மாதிரிகள், ராம்குமார் விட்டு சென்றதாக கூறப்படும் அரிவாள் மற்றும் இரத்தக்கறை படிந்த ராம்குமாரின் சட்டை போன்றன இக்கொலையில் முக்கிய தடயங்களாக உள்ளன.

குறித்த அனைத்தினையும் இரசாயன மற்றும் தடவியல் பரிசோதனைகளுக்காக பொலிஸார் அனுப்பி வைத்திருந்த நிலையில் தற்போது அதன் அறிக்கை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ராம்குமார் அணிந்திருந்த சட்டையில் படிந்து இருந்தது சுவாதியின் இரத்தமே என பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, குறித்த ஆய்வு அறிக்கையினை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.