தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரியல் ஹீரோவாக செயல்பட்ட பிரிட்டிஷ் விமானி

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக பத்திரமாக தரையிரக்கப்பட்டுள்ளது. BA295 flight என்ற விமானம் லண்டனின் Heathrow விமான நிலையத்தில் இருந்து சிகோகோவிற்கு சென்றுள்ளது.british

விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே விமானத்தின் பின்புறத்தில் உள்ள இரண்டு சக்கரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நிலமையை புரிந்துகொண்ட விமானி, சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை உடனடியாக Heathrow விமான நிலையத்தில் தரையிரக்கியுள்ளார். விமானம் தரையிரக்கப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், பின்புற சக்கரங்கள் தெளிவாக புலப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து அந்த விமானத்தில் பயணித்த நபர் ஒருவரின் மனைவியான Muriel Gray, விமானத்தை பத்திரமாக தரையிரக்கிய விமானிக்கு முத்தங்கள் தருகிறேன் என்று டுவிட் செய்துள்ளார். மேலும், ரியல் ஹீரோவாக செயல்பட்ட விமானிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ஆனால், தொழில்நுட்ப கோளாறு எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பான தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

Comments
Loading...