Designed by Iniyas LTD
ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு வலுவான அணியை களம் இறக்குகிறது பிரேசில்
ரியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பிரேசில் நாடு, 209 வீராங்கனைகள் உள்பட 462 பேர் கொண்ட வலுவான அணியை களம் இறக்குகிறது. 
ஒலிம்பிக்கில் பிரேசிலின் மெகா அணி இது (முன்பு 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக 277 பேர் ) தான். இது தவிர பயிற்சியாளர்கள், அணி நிர்வாகிகள், மருத்துவ உதவியாளர்கள் என்று மேலும் 344 பேரும் அந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். தடகளத்தில் ‘வைல்டு கார்டு’ சலுகை கிடைத்தால் இந்த எண்ணிக்கை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும்.