Designed by Iniyas LTD
ரூ.40 ஆயிரம் கோடிக்கு ரஷ்ய ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா!
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா செல்ல இருப்பதையொட்டி, ரஷ்யாவிடாமிருந்து ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஏவுகணைகளை வாங்க ராணுவ தளவாட கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 23, 24 ஆம் தேதிகளில் ரஷ்யா செல்கிறார். மாஸ்கோவில் அவர் ரஷ்யாவிடம் ராணுவ தளவாடங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
இதையொட்டி ராணுவ அமைச்சகத்தின் முக்கியமான கொள்ளை முடிவுகளை எடுக்கும் அமைப்பான ராணுவ தளவாட கொள்முதல் குழு நேற்று கூடியது. ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான இந்த குழு ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு ஒப்பதல் அளித்தது.
அதன்படி, ரஷ்யாவிடம் இருந்து எந்த திசையிலும் தடையின்றி இயங்கக்கூடிய எஸ்400 என்ற நவீன ஏவுகணைகள் 5 அலகுகளை இந்தியா வாங்குகிறது. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது. இது நீண்ட தூர ஏவுகணைகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க இந்திய விமானப்படைக்கு உதவும்.
இந்திய கடற்படைக்காக 5 போர்க்கப்பல்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட உள்ளது. இதன் மதிப்பு ரூ.9 ஆயிரம் கோடி, 6 பினாகா ராக்கெட்டுகள் தயாரிப்பதற்கான கருவிகள் ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் வாங்கப்படுகிறது.
இவை தவிர ராணுவ பீரங்களில் பயன்படுத்துவதற்காக ரூ.450 கோடிக்கு 120 இழுவலைகள், பயங்கவாதத்துக்கு எதிரான தாக்குதல்கள் நடைபெறும் பகுதிகளில் பயன்படுத்துவதற்காக 571 குண்டு துளைக்காத கார்கள் ரூ.30 கோடி மதிப்பிலும் வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
24 விமானப்படை பிசவுரா விமானப்படை ஏவுகணைகளை ரூ.1,200 கோடியில் மின்னணுமயமாக்கவும், 2 மின்னணு போர்நடவடிக்கை கருவிகளை ரூ.425 கோடியில் உருவாக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.