Designed by Iniyas LTD
ரோஹித் சர்மாவின் கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் எதிர்வரும் போட்டிகளில் விளையாட மாட்டார்
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரில் இவ்விரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியின் போது ரோஹித் சர்மாவின் கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனையடுத்து எதிர்வரும் போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்றும், அதே போல் இந்த மாதம் 13 திகதி தொடங்கவுள்ள சம்பியன் லீக் போட்டியில் இருந்தும் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4வது ஒரு நாள் போட்டி 2ம் திகதி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.