தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

லசந்த படுகொலை தொடர்பில் 200 இராணுவப்புலனாய்வாளர்களிடம் விசாரணை!

lasantha-450x285லசந்த விக்கிரமதுங்கவைப் படுகொலை செய்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி சார்ஜன்ட் மேஜர் எதிரிசிங்க ஜெயமான்னேயுடன் பணியாற்றிய இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்ஜன்ட் மேஜர் ஜெயமான்னேயுடன் பணியாற்றிய 200 இராணுவப் புலனாய்வாளர்களை அடுத்து வரும் வாரங்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இவர்களில் பலர் ஓய்வு பெற்றுவிட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்த்துள்ளனர்.
ஜெயமான்னேயுடன் பணியாற்றிய இராணுவப் புலனாய்வு அதிகாரிகளின் பட்டியலை தருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சிறிலங்கா இராணுவத் தலைமையகத்திடம் கோரியுள்ளனர்.

Comments
Loading...