Designed by Iniyas LTD
லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் 2வயது பன்றிக்குட்டி…
தென் ஆப்பிரிக்காவில் ஓவியம் வரையும் முதல் விலங்கு என்ற பெருமையை 2வயது பன்றிக்குட்டி பெற்றுள்ளது.
படங்களில் யானை, குரங்கு, நாய் போன்ற மிருகங்கள் மனிதர்களைப் போல் பல வேலைகளை செய்யும். இது போன்று நடந்துகொள்வதற்கு அந்த மிருகங்களுக்கு பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கும்.
அப்படி தான் இந்த பன்றிக்குட்டிக்கும் அதன் உரிமையாளர் ஓவியம் வரைய பயிற்சி அளித்திருக்கிறார்.
விளையாட்டாக அவர் கற்று கொடுத்த அந்த பயிற்சியை கற்பூரம் போல கற்றுக்கொண்ட அந்த பன்றி , இப்போது ஓவியங்களை வரைந்து தள்ளுகிறதாம்.
வாயில் பிரஷ் பிடித்து அந்த பிரஷினை வண்ணகலவையில் தொட்டு, லாவகமாக அந்த பன்று வரையும் ஓவியங்கள் ஒவ்வொன்றும், 300 முதல் 4000 டாலர் வரை விலை போகிறதாம்.
இந்த பன்றி வரைந்த ஓவியங்கள் ஆர்ட் மியூசியத்தில் கூட இடம் பிடித்திருக்கிறதாம். இரண்டு வயதான இந்த பெண் பன்றிக்குட்டி தென் ஆப்பிரிக்காவில் இருக்கிறது.
உலகிலேயே ஓவியம் வரையும் முதல் விலங்கு என்ற பெருமை இந்த பன்றிக்குட்டியையே சேரும். இந்த நிலையில் அதனை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்க பலர் விரும்பினாலும் பன்றிக்குட்டியை விற்க மறுத்திருக்கிறார் அதன் உரிமையாளர்.
