Designed by Iniyas LTD
லண்டனில் பாரிய தீ விபத்து !
வடக்கு லண்டனிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு நூற்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
பகுதியில் உள்ள White Hart தெருவில் இந்த பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு 25 தீயணைப்பு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதில் குறைந்தது 140 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சம்பவத்தில் தீக் காயங்களுக்குள்ளான ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக லண்டன் அம்பியுலனஸ் சேவை உறுதி செய்துள்ளது.இது ஒரு பாரிய தீப்பரவலாகும், சூடு அதிகரிக்கும் போது அங்கிருக்கும் பாரிய அளவிலான சிலிண்டர்கள் வெடிக்க கூடும் என லண்டன் தீயணைப்புப் பிரிவின் மேலாளரான Sam Kazmanli தெரிவித்துள்ளார்.காற்றில் புகை நிறைந்துள்ளது. ஒரு முன்னெச்சரிக்கையாக, அந்த பகுதி மக்கள் தங்களது வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன என இன்னமும் தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது