Designed by Iniyas LTD
லண்டன் சுரங்கப்பாதையில் வெடி விபத்து! பயணிகள் படுகாயம்
லண்டனின் பேர்சன் கீரீன் பகுதியில் உள்ள சுரங்கதொடருந்து நிலையத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதால் பல பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பேர்சன் கீரீன் ரயில் நிலையத்தில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளள்னர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர், நோயாளர் காவுவண்டி, தீயணைப்புத்துறையினர் ஆகியோர துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.