Designed by Iniyas LTD
லண்டன் விமான நிலையத்தில் 200க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதம்- பயணிகள் தவிப்பு
இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக வானிலை மாறியுள்ளதால் அங்கு தொடர் மின்னல்கள் ஏற்பட்டு வருகின்றநிலையில் அங்கு விமான சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. .
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 60,000க்கு மேற்பட்ட மின்னல்கல் பதிவாகி உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய பதிவு
இதன்காரணமாக லண்டன் விமான நிலையத்தில் மட்டும் சுமார் 200க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
மேலும், புறப்பட இருந்த 31 விமானங்களும், வருகை தரவிருந்த 18 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் பல விமானங்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன.
விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையாக அவதிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
