தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

லா லிகா கால்பந்து தொடரில் மெஸ்ஸி 30 ஹாட்ரிக் கோல்கள் அடித்துள்ளார்

லாலிகா கால்பந்து தொடரில்,  டிபோர்டிவோ அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.lionel_messi

ஸ்பெயினில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையிலான ஸ்பானிஷ்லீக் தொடரின் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனாவும், டிபோர்டிவோ அணியும் மோதின.

போட்டியின் ஆரம்பத்தில் சிலநிமிடத்திலேயே மெஸ்ஸிக்கு ஒருகோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை டிபோர்டிவோ அணியின் கோல்கீப்பர் பேப்ரிசியோ தடுத்தார். ஆனால், 11வது நிமிடத்தில் இவான் ரேகிடிச் கொடுத்த கிராஸ அற்புதமாக தலையால் முட்டிகோல் அடித்தார் மெஸ்ஸி.

பின்னர், 33வது நிமிடத்தில் சகவீரர் நெய்மர் பாஸ்கொடுக்க, நேர்த்தியாககோல் கீப்பரை ஏமாற்றி மெஸ்ஸிகோல் அடிக்க, பார்சிலோனா முதல்பாதியில் 2-0  என முன்னிலை பெற்றது.

பிற்பாதியிலும் பார்சிலோனாவின் கை ஓங்கி இருந்தது. 62வது நிமிடத்தில் தனது இடது காலின் மூலம் தனது பிரத்யேகஷாட் மூலம் மெஸ்ஸி கோல் அடிக்க, டிபோர்டிவோ நிலைகுலைந்தது.

போட்டி முடிவதற்கு பத்து நிமிடங்கள் இருந்த போது டிபோர்டிவோ அணியின் பின் களவீரர் சிட்னே “சேம்சைடு’ கோல்அடித்தார். முடிவில் பார்சிலோனா 4-0  என வெற்றி பெற்றது.

மெஸ்ஸி இதுவரை பார்சிலோனா அணிசார்பில் 30 ஹாட்ரிக்கோல்கள் அடித்துள்ளார்.  அவரை அணியின் மேலாளர் லூயிஸ் என்ரிக் ஏகத்துக்கும் புகழ்ந்துள்ளார். சமீபகாலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ரியல்மாட்ரிட் அணி கெடாஃபே அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில்,  உலகின் சிறந்த வீரர் விருதை வென்றரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்தார்.

புள்ளிகள் பட்டியலில் ரியல் மாட்ரிட்  45 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பார்சிலோனா 44 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், லாலிகா சாம்பியனான அட்லெடிகோமாட்ரிட்  41  புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Comments
Loading...