தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

லிப்டில் (மின்தூக்கி) சிக்கி இரு துண்டுகளான இளம்தாய்!

இளம் தாய் ஒருவர் மின் தூக்கிக்குள் கட்டிலுடன் கொண்டு செல்லப்பட்டபோது மின்தூக்கி திடீரென மேலெழுந்தது. கட்டிலிருந்தவர் உடல் இரு துண்டுகளாகி கொடூரமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஸ்பெயினில் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள வால்மே மருத்துவமனையில் 26 வயது ரோசியோ கார்ட்ஸ் என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.

குழந்தை பிறந்தவுடன் குழந்தை, தாய் இருவரையும் வேறு விடுதிக்குக் மாற்ற கட்டிலுடன் மின்தூக்கியில் மருத்துவனை ஊழியர்கள் அழைத்து சென்றனர்.

உள்ளே நுழையும் முன்பே மின்னுயர்த்தி திடீரென இயங்கியது. இதனால் கட்டிலில் இருந்த அந்த பெண் இரு துண்டுகளானார். இந்தச் சம்பவத்தில் குழந்தை உயிர்பிழைத்தது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...