Designed by Iniyas LTD
லெபனானில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்
லெபனான் நாட்டில் சிக்கியுள்ள தமிழகத் தொழிலாளர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
லெபனான் நாட்டின் சோக் மோஸ்பே நகரில், ஃபிலிடெக்ஸ் என்ற ஆயத்த ஆடை நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் ஒப்புதல் பெறாத பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக கூறி, அவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து லெபனானில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், லெபனானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.