தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்- ஜெ

ஜெமத்திய அரசு தமிழர்களை வஞ்சித்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமையவிடாமல் மத்திய அரசு தாமதம் செய்கிறது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். லோக்சபா தேர்தலை ஒட்டி அதிமுக வேட்பாளரை ஆதரித்து மூன்றாவது நாளாக நாகையில் இன்று ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தொகுதியாகும். அதிமுக கூட்டணியில் இந்தமுறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே நாகப்பட்டினம் தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். நாகை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் கே.கோபாலை ஆதரித்து அவுரித்திடலில் ஜெயலலிதா பேசினார்.

Comments
Loading...