Designed by Iniyas LTD
லோக் ஆயுக்தா வருமானால் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள் : விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று திருப்பூர் தாராபுரத்தில் நடைப்பெற்ற மே தின கூட்டத்தில் பங்கேற்றுப்பேசினார். அப்போது அவர், ’’அதிமுகவும் , திமுகவும் தமிழகத்தை சீரழித்துவிட்டன. தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வந்தால் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள்’’ என்று தெரிவித்தார்.
பிரேமலதா விஜயகாந்த் பேசியபோது, ‘’தமிழகத்தில் அதிமுகவும், திமுகவும் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. பெண்களே போராட்டக்களத்தில் இறங்கியுள்ளதால் தமிழகத்தில் மாற்றத்திற்காக நேரம் உருவாகியுள்ளது’’ என்று தெரிவித்தார்.