தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட யாழ். பல்கலைகழக மாணவர்கள் மீது தாக்குதல்

யாழ் பல்கலைக்கழக நுண்கலை பீட மாணவர்கள் மீண்டும் இன்றைய தினம் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நுண்கலைபீட துறை தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாக குழு தவறியதையடுத்தே இறுதியாண்டு மாணவர்கள் மீண்டும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.yaal

பல்கலைக்கழக நுண்கலை பீடத்தை சேர்ந்த சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள் மூன்றம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்தும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் இந்த மாதத்திலேயெ மூன்று தடவைகள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் உரியவர்களுக்கு கலைப்பீடாதிபதி ஊடாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும், அந்த கற்கைக்குரிய விரிவுரையாளர்கள் இதுவரை தமது பதிலை வழங்கவில்லை என நுண்கலை பீடத்தின் நடனத்துறை தலைவர் அருட்செல்வி தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்  பேரணி

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து இப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு கொள்ளுப்பிட்டி சந்தியை அடைந்த வேளை பொலிஸார் தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தும் பேரணியை கலைக்க முற்பட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Comments
Loading...