தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை

வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

குறைந்தகாற்றழுத்ததாழ்வுநிலை

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக இரவில் பனிபெய்து வருகிறது. இந்த நிலையில் பனிபெய்வது சற்று குறைந்து உள்ளது. அதற்கு பதிலாக பகலில் வெயில் கடுமையாக கொளுத்துகிறது. கோடை தொடங்கி விட்டதாக கூறும் அளவுக்கு வெயில் அதிகமாக அடிக்கிறது.இந்த நிலையில் இலங்கை அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:–வானிலை மையம்

3 நாட்கள்மழைபெய்யும்

இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்று 19-03-2014  (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நேற்று பகலில் வெயிலின் தன்மை அதிகமாக இருந்தது. அதன் காரணமாக பொதுமக்களில் பலர் குளிர்பானங்களை குடித்து தாகம் தீர்த்தனர். அதிக வெயில் காரணமாக மாலையில் மெரினா கடற்கரையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Comments
Loading...