Designed by Iniyas LTD
வங்கக்கடலில் மீன் பிடிக்கச்சென்ற 5 மீனவர்கள் பலி! 20 பேரைக்காணவில்லை
மேற்குவங்க மாநிலத்தில் இருந்து வங்கக் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் காணவில்லை.
மேற்குவங்க மாநிலத்தில் இருந்து வங்க கடலில் மீனவர்கள் 20-க்கும் அதிகமானோர் படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். மோசமான வானிலை காரணமாக அவர்கள் சென்ற படகு சர்வதேச எல்லைப் பகுதியில் விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து வங்கதேசம் கடற்கடை படையுடன் இணைந்து தேடுதல் பணி பெற்று வருவதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூழ்கிய படகில் இருந்து மீனவர்களில் ஒருவரை வங்கதேச மீனவர்கள் மீட்டு இந்திய மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.
மீட்பு பணிகளில் இதுவரை 5 மீனவர்களின் சடலங்கள் வங்கதேசத்தின் ஹெரான் பகுதி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 20 பேரின் நிலைமை என்னவானது என்று தெரியவில்லை.