தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வஞ்சிக்கப் படும் ஈழத்துப் பிஞ்சுகள்

harishnavi new
பிஞ்சு ஒன்று
வஞ்சிக்கப் பட்டதேனோ.

நல்லாட்சியின் நசுக்கல் இதுதானோ.

கோரப் பற்களால் கொல்லப்பட்டது பிள்ளை.

அம்மா என்ற கடசித் துடிப்பும்
அடங்க
நெரிக்கப் பட்டது
களுத்து.

அன்று யாழ்ப்பாணம் அழுதது
இன்று வவுனியா வடிக்குது
கண்ணீர்.

இனி எப்போ எங்கே என
இதயம் துடிக்க
வெடிக்குது கோபம்.

என்ன செய்ய ஏது செய்ய
யாரிடம் போக.

எங்கள் மண்ணகம்
கானகம் ஆக்கப் பட்டதை
யாரிடம் சொல்ல.

எங்கள் முற்றத்து மல்லிகையின் முடிவு இப்படியானதை யாரிடம் சொல்லி அழ.

முதல் நாள் கருத்தால்
இரண்டாம் நாள் ஆர்ப்பாட்டம்
மூன்றாம் நாள் அடக்கம்
இப்படியே கழியுது எம்மவர் ஏமாற்றம்.

எல்லோரும்
ஒன்றை மறந்து விடுவர்
இந்நேரம் அடுத்த வேட்டைக்கு
தயாராவர்
அந்தக் காமத்துப் பேய்கள்.

நல்லாட்சிப் பலிபீடத்தில்
அவர்கள் தான் சுதந்திர
சாத்தான்கள்.
த.செல்வா
23.02.2016-

Comments
Loading...