Designed by Iniyas LTD
வடமராட்சி கிழக்கு மற்றும் செம்மணிப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு பிரதமர் பணிப்புரை..
வடமராட்சி கிழக்கு மற்றும் செம்மணிப் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேறறைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே பிரதமர் இந்த பணிபுரையினை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பலாலி வீதியை முழுமையாக விடுவிக்குமாறும், பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 647 ஏக்கர் காணிகளை விடுக்கவேண்டும் எனவும்,
பலாலி வானூர்தி நிலையத்துக்கு தேவையான அளவு நிலப் பகுதியை சிவில் வானூர்தி திணைக்களத்தின் ஊடாக அரசிதழ் அறிவித்தல் வெளியிடுவதற்கும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கும் பிரதமர் சாதகமான பதில் வழங்குயுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.