தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடகொரியாவில் தென்கொரிய மாணவன்

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே தீராப்பகை உள்ளது. இந்த நிலையில், ஹாங்காங்கில் உள்ள தென் கொரிய தூதரகத்தில் வடகொரியாவை சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் தஞ்சம் கேட்டதாக ஊடக தகவல்கள் வெளியாகின.  North-Korean

அவர் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் 2 வாரங்களுக்கு முன் நடந்த கல்விப்போட்டி ஒன்றில் பங்கேற்க குழுவுடன் வந்தவர் என்றும், அவர் ராணுவ பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும், கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்தவர் என்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இது குறித்து ஹாங்காங்கில் உள்ள தென்கொரிய தூதரகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. போலீசும் கருத்து கூற மறுத்து விட்டது.  இருப்பினும் இது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments
Loading...