தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடகொரியா, மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தப் போவதாக மிரட்டல்

தங்களுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா, மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.north-koriya

வட கொரியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், இந்த விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்லவேண்டும் எனவும் ஐ.நா.வில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வட கொரியா, இதற்குப் பதிலடியாக அணு ஆயுதப் பரிசோதனையை நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தது.

Comments
Loading...