Designed by Iniyas LTD
வடகொரிய ராஜீய அதிகாரியிடம் இருந்து தங்க கட்டிகள் பறிமுதல்
வங்கதேசத் தலைநகர் தாக்காவுக்கு வந்த வடகொரிய ராஜீய அதிகாரியின் விமான ஹேண்ட் லக்கேஜில் இருந்து 14 லட்சம் டாலர் பெறுமதியுள்ள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ளதாக அந்நாட்டின் சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து தாக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு வடகொரிய தூதரகத்தின் முதன்மைச் செயலரான சோன் யுங் நாம் வந்திறங்கியபோது அவர் கையோடு கொண்டுவந்த பையை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்ததில் அதில் 27 கிலோ தங்கம் இருந்துள்ளது.
ராஜீய அதிகாரி விடுவிக்கப்பட்டு விட்டார் என்றாலும் அவருக்கு எதிராக குற்றச் சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க வங்கதேச அதிகாரிகள் கூறுகின்றனர்.