தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கிலுள்ள பல இராணுவ முகாம்களின் மீது கல் வீச்சு

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கிலுள்ள பல இராணுவ முகாம்களின் மீது கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதாக பரப்பப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.NYT2008112110222443C

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவத்தை மறுத்து இராணுவப் பேச்சாளர் விசேட அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சமாதானமானதொரு சூழல்நிலை காணப்படுவதாகவும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியும் உண்மைக்குப் புறம்பானது எனவும் இராணுவப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

Comments
Loading...