Designed by Iniyas LTD
வடக்கில் இருந்து இராணுவத்தினரை அகற்ற தமிழ் மக்கள் எதிர்ப்பு- கருணா..
வடக்கில் இருந்து இராணுவத்தினரை அகற்ற தமிழ் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.
அண்மையில் கிளிநொச்சி – முல்லைத்தீவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினரே ஈடுபட்டதகவும்,
வடக்கு மக்கள் பாதிக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு உதவியாக இராணுவத்தினரே செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே இராணுவத்தினர் போரிட்டதாகவும் தமிழர்களுக்கு எதிராக அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இராணுவத்தினருக்கு எதிராக விக்னேஸ்வரன் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
விக்னேஸ்வரன் இனவாத கருத்துக்களை வெளியிடும் போது அரசாங்கம் அமைதியாக உள்ளதாகவும், சாதாரண நபர் ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட்டால் சிறையில் இருக்க நேரிடும் எனவும் கருணா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராணுவத்தினருக்கு ஆதரவாக வடக்கு மக்கள் செயற்படுவதாக கருணா வெளியிட்டுள்ள இந்த கருத்து பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.