Designed by Iniyas LTD
வடக்கில் படைகளை வெளியேற்ற மகிந்த ஒப்புதலாம்.

வடமாகாணத்தில் இருந்து சிங்களப்படைகளை வெளியேற்றுமாறு, மகிந்த ராஜபக்சவிடம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மியன்மாரில் நேற்று நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாகவும் இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.
வடக்கில் தற்போது காணப்படுகின்ற சிங்களப்படைகளை குறைக்குமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தினார். அதற்கு மகிந்த ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை வடக்கில் இருந்து 175,000 துருப்பினரை வெளியேற்றி இருப்பதாகவும், எஞ்சியுள்ள படையினரை கண்ணிவெடி அகற்றும் பணிகள் மற்றும் உட்கட்டுமான நிர்மாணப் பணிகள் என்பன நிறைவடைந்த பின்னர் வெளியேற்றுவதாக மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருக்கிறார்.
இதன் போது மீனவர்களின் பிரச்சினை குறித்தும் பேசப்பட்டுள்ளதாகவும் .தமிழக மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துமாறு மன்மோகன்சிங் மகிந்த ராஜபக்சவை வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.