Designed by Iniyas LTD
வடக்கில் பெய்து வரும் கனமழையால் மக்கள் பாதிப்பு
வடக்கில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. 10ஆயிரத்து 52 குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆயிரத்து 889 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஒரு வார காலமாக வடக்கு மாகாணம் முழுவதிலும் கனமழை பெய்து வருகின்றது.அதனால் கிளிநொச்சி மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.
