Designed by Iniyas LTD
வடக்கு – கிழக்கை இணைத்து தமிழர்களுக்கு கொடுக்க அமெரிக்கா சதி! உதய கம்மன்பில
வடக்கு-–கிழக்குக்குக் கூட்டாட்சித் தீர்வைக் கொடுப்பதில் குறியாக உள்ளது அமெரிக்கா. இதற்காகத் திட்டமிட்ட அடிப்படையில் இங்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.”தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இங்கு செயற்கையான பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைச் சில நாடுகள் விரும்புகின்றன. அந்த நாடுகளே சதி செய்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
பன்னாட்டு நெருக்கடிகள் இருந்தபோதிலும்,மகிந்த பொருளாதாரத்தை நல்ல நிலையில் தக்க வைத்திருந்தார். ஆனால், பொருளாதார நிபுணர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தைச் சீரழித்துÂ Øïகொண்டு வருகின்றனர்.
இதன் வீழ்ச்சியை இன்று கிராம மக்களும் உணரத் தொடங்கிவிட்டனர். சர்வதேச நாடுகள் இங்கு நினைத்ததைச் சாதிப்பதற்குப் பொருளாதார வீழ்ச்சியைத் திட்டமிட்டு ஏற்படுத்துகின்றன. சீனா அடி மாட்டு விலைக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வாங்க வேண்டுமென்றால் இங்கு பொருளாதார நெருக்கடி இருக்கவேண்டும்.
தொடர்புடைய பதிவு
அதேபோல்,திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியா வாங்க வேண்டுமென்றாலும் பொருளாதார நெருக்கடி இருக்க வேண்டும். அமெரிக்காவின் விருப்பத்தின்படி வடக்கு-கிழக்குக்கு கூட்டாட்சித் தீர்வைக் கொடுக்க வேண்டுமென்றாலும் இங்கு பொருளாதார நெருக்கடி இருக்கவேண்டும்.
ஆகவே,இந்த நாடுகள் தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இங்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதை விரும்புகின்றன.அந்த நாடுகளே சதி செய்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.
வடக்கு-கிழக்குக்குக் கூட்டாட்சித் தீர்வை வழங்கவேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாக உள்ளது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அந்த நாடு இங்கு செயற்கையான முறையில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்புவதற்காக அமெரிக்காவின் நிபந்தனைக்கு இந்த நாட்டு மக்களை இணங்கச் செய்வதன் ஊடாகக் கூட்டாட்சியை இலகுவாக நிறைவேற்றிவிட முடியும்.
இவ்வாறான பன்னாட்டுச் சதிகளுக்குள் எமது நாடு இன்று சிக்கித் தவிக்கின்றது. சர்வதேசத்துடன் நல்லுறவைப் பேணுகின்றோம் என்ற போர்வையில் இந்தச் சதிகளுக்கு இந்த அரசு இடங்கொடுத்து வருகின்றது. இது எதிர்காலத்தில் பெரும் சிக்கலை எமக்கு ஏற்படுத்தப் போகின்றது-என்றார்.