தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கு மாகாணத்தில் தமிழ் மாணவர்களை போதைக்கு அடிமையாக்கி இன அழிப்பு : இலங்கை அரசு மீது புகார்

drugஇலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் அதிக‌ அளவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போதைப்பொருள் விற்பனையை ஊக்குவிப்பதன் மூலம் மறைமுகமாக இன அழிப்பு நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபடுவதாக அரசியல் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

இலங்கையில் இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழர் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் பெருமளவு வசிக்கும் வடக்கு மாகாணத்தில் திட்டமிட்டு போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தனி ஈழம், தமிழ் தேசிய சிந்தனை இளைய தலைமுறைக்கு உருவாகாமல் தடுக்க இலங்கை அரசு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இன அழிப்புக்காக செயல்படுத்தப்படும் திட்டமிட்ட சதி என்றும், இது தமிழர்கள் மீதான மறைமுகப் போர் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் போதைப் பொருள் புழக்கத்தை தடுப்பதற்காக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. இதனிடையே, இந்தியாவில் குறிப்பாக கேரளாவிலிருந்து, இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வடமாகாண உறுப்பினர் அனந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். போதைப் பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments
Loading...