தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடமராட்சியில் சட்டவிரோதமாக நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை உடனடியாக வெளியேற்ற கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு…

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமாக நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை உடனடியாக வெளியேற்ற கிளிநொச்சி நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மருதங்கேணி பிரதேசசெயலகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியாருக்கு சொந்தமான காணிகளை வாடகைக்கு பெற்று வாடிகளை அமைத்து தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும்  அவர்களிற்கு அனுமதிக்கப்பட்ட பகல் நேரம் மற்றும் கடற்கரையிலிருந்து ஜந்து கிலோமீற்றரிற்கு அப்பால் எனும் நிபந்தனைகளை மீறி தொழிலில் ஈடுபடுவதால் உள்ளுர் மீனவர்களுடன் மோதல்நிலை தொடர்கின்றது.
இந்நிலையில் தென்னிலங்கை மீனவர்களிற்கான வாடிகளை அமைக்க மருதங்கேணி பிரதேச செயலகம் அனுமதி மறுத்திருந்தததுடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை அகற்ற கிளிநொச்சி நீதிமன்றினை நாடியிருந்தது.
இதன் காரணமாக  சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களின்  வாடிகளை அகற்ற நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...