தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடமராட்சி கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள்..

வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டைத் தொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்களை இன்று அதிகாலை வேளை வடமராட்சி மீனவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
மூன்று படகுகளும் எட்டு தென்னிலங்கை மீனவர்களும் இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டிருந்தனர்.
பிடிக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில்  தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொலிஸார் அவர்களை கையேற்று கொண்டு செல்ல முற்பட்டபோது பொலிஸாருக்கும் வடமராட்சி மீனவர்களிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிகபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...