தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடமாகாணத்தின் புதிய ஆளுநராக சிரேக்ஷ்ட ஊடகவியலாளர் ஒருவரை தெரிவுசெய்ய மஹிந்த உத்தேசம்…

தற்போது வட மாகாணத்தின் புதிய ஆளுநராக  சிரேக்ஷ்ட ஊடகவியலாளர்  என்.வித்தியாதரனைத் தெரிவுசெய்வதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின்  சகோதரியின் கணவரான திருகுமார் நடேசனுடைய நெருங்கிய சகாவான சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரனை வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகத் தெரிவு செய்வதற்கு திருகுமார் நடேசன் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிகபப்டுகின்றது,
இந்நிலையில்  நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்த அடுத்த கணம்  வித்தியாதரனை வடக்கு மாகாணத்தின் ஆளுநராகத் தெரிவுசெய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ இணங்கி இருக்கின்றார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 கடந்த வெள்ளிக்கிழமை  புதிய பிரதமராக பதவியேற்ற  மஹிந்த ராஜபக்ஷ மறுநாள்  கொழும்பிலுள்ள தனது  இல்லத்துக்கு வித்தியாதரனை அழைத்து,  அவருடன் வடக்கின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரயாடியுள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது.
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் கொழும்பில் வைத்து பட்டப்பகலில் வெள்ளை வானில் கடத்தப்பட்டிருந்த வித்தியாதரன்  பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை நினைவில்கொள்லத்தக்கது..
இதேவேளை வித்தியாதரனின்  நெருங்கிய நண்பரான சுடரொளி ஆசிரியர் சிவராசா தற்போது  மஹிந்த தரப்பின் நெருங்கிய சகாவாக உள்ளமை  இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...