Designed by Iniyas LTD
வடமாகாண பெண்களுக்கு வழங்கப்படவேண்டிய கௌரவம் தென்னிலங்கை பெண்களிற்கு…
வடமாகாண பெண்களுக்கு வழங்கப்படவேண்டிய கௌரவம் தென்னிலங்கையை சோ்ந்த 2 பெண்களுக்கு வழங்கப் பட்டுள்ளதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
சா்வதேச மகளீா் தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்திலும், மாகாண மட்டத்தி லும் தனியாகவும், குழுவாகவும் தொழில் முயற்சிகள் மற்றும்,
இதர துறைகளில் சா தித்த பெண்களுக்கும், தேசிய மட்டத்தில் சாதித்த பெண்களுக்கும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 5 பெண்கள் கௌரவிக்கப்பட்ட நிலையில், 3 பெண்கள் மட்டுமே வடமாகாணத்தை சோ்ந்தவா்கள் எனவும் மற்றய இரு பெண்கள் தென்னிலங்கையினை சேர்ந்தவர்கள் எனவும் வடமாகாண மகளீா் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அந்தவகையில் சிங்கள நடிகை ஒருவரிற்கு வடமாகாண ஆளுநருடைய தனிப்பட்ட சிபாா்சின் பெயாில் கௌரவிப்பு வழங்கப்பட்டு நிகழ்வில் மதிப்பு கெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்
இந்நிலையில் வடக்கல் சாதனை பெண்களை எதற்காக கௌரவிக்கவில்லை? என கேள்வி எழுப்பியபோது, தென்னிலங்கையை சோ்ந்த இரு பெண்களுக்கு வழங்கப்பட்ட கௌரவம் ,
ஆளுநாின் தனிப்பட்ட தொிவு எனவும், அதில் அமைச்சுக்கு சம்மந்தம் இல்லை. என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.