Designed by Iniyas LTD
வடமாகாண முதலமைச்சரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மௌனம் காக்கும் அமைச்சர் மனோகணேசன்..
வடமாகாணத்திலுள்ள கிராமங்கள், மற்றும் வீதிகளிற்கு தமிழில் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரச அமைச்சர் மனோகணேசனிடம் வடமாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் முதலமைச்சரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை அமைச்சர் மனோகணேசன் பதிலேதும் தெரிவிக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.
தொடர்புடைய பதிவு
அண்மைக்காலமாக தமிழ் மக்களது கிராமங்கள்,மற்றும் வீதிகள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களத்தில் பெயர்கள் சூட்டப்பட்டுவருகின்றன.
இதனை கருத்தில் கொண்டே தமிழ் கிராமங்கள் அதிலுள்ள வீதிகளிற்கு தமிழில் பெயர் சூட்ட முதலமைச்சர் கோரிக்கை விடுத்துவிடுத்துள்ளார்.
இதேவேளை அனுமதியின்றி சிலைகள் வைத்து இனமோதல்களை ஏற்படுத்த வேண்டாமென தொல்பொருள் பணிப்பாளர் நாயகம், பிரதி பொலிஸ் மாதிபர், ஒட்டுசுட்டான் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தான் அறிவித்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.