Designed by Iniyas LTD
வட மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் நாளை பதவியேற்க உள்ளார்
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.
அவர் அங்கே 2 வாரங்கள் தங்க உள்ள நிலையில் வட மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் நாளை பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பத்தரமுல்லவில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உப அலுவலகத்தில் நாளைக் காலை 10.30 மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் க.சர்வேஸ்வரன் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகின்றது.