தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வட-முதல்வரிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லையாம்! கனடா குழு

vigneswaran-300x201வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் எமது வருகை தொடர்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே தெரியப்படுத்தியிருந்த போதிலும் அவரிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் கிட்டவில்லையென கனடாவில் இருந்து வருகை தந்த முதலீட்டாளர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

கனடாவில் இருந்து வருகைதந்த முதலீட்டாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 29 பேர் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் வட மாகாண ஆளுநரை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். அதன் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ,

எமது இலங்கை விஜயம் தொடர்பில் நாம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம்  கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே எழுத்தில்  தெரியப்படுத்தியிருந்த போதிலும் அவரிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் கிட்டவில்லை. அதேநேரம் இன்றைய தினம்  ( நேற்று) வட மாகாண முதலமைச்சரின் அலுவலகம் சென்றும் சந்திப்பில் ஈடுபட்டோம் அங்கும் ஓர் ஆக்கபூர்வமான பதில் கிடைக்கவில்லை.

இலங்கையில்இடம்பெற்ற யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திக்கு முதலீடும் பாரிய பங்களிப்பு அவசியம். அதற்கான ஏது நிலைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதே எமது நோக்கம். அதிலும் குறிப்பாக வடக்கின் அபிவிருத்திக்கான முதலீடே எமது முக்கிய எண்ணம் இதற்கான முக்கிய பிரதிநிதியாக முதலமைச்சரே விழங்குவார் எனவே தான் அவரையும் சந்திக்க முயன்றோம்.

இதேவேளை எமது இலங்கைக்கான பயணத்தின்போது ஜனாதிபதி , பிரதமர் , உரிய அமைச்சர்கள் வடமாகாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடுகின்றோம் என்றனர்

Comments
Loading...